குத்தாட்டத்தைக் கண் சிமிட்டாமல் ரசிக்கும் நாய்கள்

31
Advertisement

இளம்பெண்ணின் குத்தாட்டத்தைக் கண்கொட்டாமல் ரசிக்கும்
நாய்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும்
கவர்ந்துவருகிறது.

ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட் அணிந்த ஓர் இளம்பெண் சாலையின் நடுவே நின்று
இந்திப்பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து சிம்ரன்போல் உற்சாகமாக
நடனமாடுகிறார். அவரது நடனத்தைக் கண்டு அவரது ரசிகர்கள்போல்
மெய்ம்மறந்து சுற்றி நின்று கண் சிமிட்டால் ரசித்தபடி உள்ளன.

நாய்களின் டென்ஷனை நடனமாடிக் குறைத்தாரா இல்லை
நாய்களுக்கு மத்தியில் நடனமாடி தன்னுடைய டென்ஷனைக் குறைத்தாரா
இந்த இளம்பெண் என்பது தெரியவில்லை. ஆனால், பார்வையாளர்களின்
டென்ஷன் நிச்சயம் குறைந்திருக்கும்.

Advertisement

எந்திரத்தனமாக உழைப்பவர்களுக்கு செல்லப் பிராணிகளிடம் கொஞ்சி
மகிழ்வது மனநிறைவைத் தரும். நாய்களோடு கொஞ்சி மகிழ்ந்தால் பிளட்
பிரஷர், சுகர் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், நாய்களுக்கு டென்ஷன் வராமல் ஏற்படுவதற்காக இப்படி நடனமாடி
மகிழ்விக்கிறாளோ இந்த மங்கை?