அமெரிக்க அரசின் கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை நிறுத்தும் பணியை இந்த அமைப்பு செய்து வருகிறது. இதனால் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.182 கோடி) நிதியை நிறுத்தியுள்ளது.
’பல நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக அமெரிக்க மக்களின் வரிப் பணம் செலவிடப்பட இருந்த நிலையில், அந்தச் செலவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.