Thursday, May 22, 2025

ரொம்ப நேரம் ஒரே இடத்துல இருந்து வேல பாக்குறீங்களா? ஆராய்ச்சியில் பகீர்! உஷாரா இருங்க!

இன்று நாம் பல நேரங்களாக கணினி முன்னே அமர்ந்துகொண்டு வேலை செய்வது சாதாரணமான விஷயமாகிப் போச்சு. ஆனால் இந்த ‘சாதாரண’ விஷயம் தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு பெரிய ஆபத்து என்று தெரியுமா?

பல ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மை என்னனா, நீண்ட நேரம் ஒரு இடத்துல உட்கார்ந்திருப்பது, பெரிய அளவிலான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கூட ஏற்படுத்தக்கூடியதாம். குறிப்பாக, பெருங்குடல், நுரையீரல், மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்களுக்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும் என்கிறார் புற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஷெரெசாதே.

இதோடு மட்டும் இல்ல, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், மற்றும் இளவயதில் மரணம் ஏற்படும் வாய்ப்பையும் கூடியவையாக மாற்றுகிறது. ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கும் மேலா ஒரே இடத்துல அமர்ந்திருக்கிறீங்கனா, இதய நோய் ஏற்படும் அபாயம் மோசமாக அதிகரிக்கிறது.

ஆனா நல்ல செய்தி என்னனா, இது எல்லாம் நீங்க ஒரு சின்ன பழக்கத்தை மாற்றிக்கிட்டாலே குறைக்க முடியும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை எழுந்து சற்று நடந்துவிடுங்கள். தொலைபேசியில் பேசும் போதும், சும்மா டிவி பார்ப்பதும் – அந்த நேரத்திலும் கொஞ்சம் நடந்து பழகுங்கள். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

ஒரு நாள் சுமாரா ஒரு மணிநேரம் கூட உட்காரும் நேரத்தைக் குறைத்தாலே, அகால மரண அபாயம் 20% வரைக்கும் குறையலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுவும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தாலே, உங்கள் ஆரோக்கியம் மென்மேலும் வலுவாகும்.

வேலை முக்கியம் தான். ஆனா வாழ்க்கை முழுக்கவே வேலை தான் என்று ஆரோக்கியத்தைத் தொலைத்து விடக்கூடாது. ஒரே இடத்துல அமர்ந்திருக்கிறோம் அப்படின்னா, கொஞ்சம் இடைவெளி எடுத்து படிக்கட்டில் ஏறி இறங்குவோம், நடப்போம் – இது ஒரு சின்ன முயற்சி தான், ஆனா அது நம்ம வாழ்க்கையை மாறக்கூடிய மிகப்பெரிய முடிவா இருக்கும்.

Latest news