மனித உடலின் மிக முக்கிய உறுப்பான இதயத்தை பாதுகாப்பது அவசியம். சத்தான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இதய நலத்திற்கு உதவும் உணவுகள் பின்வருமாறு:
அரிசி வகைகளில் சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசி போன்ற பாரம்பரிய நெல் வகைகளை உணவில் சேர்ப்பது நல்லது.
மீன் வகைகளில் மத்தி, சாளை, டூனா, விளமீன் போன்றவை சத்தானவை. இவை ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை என்பதால் இதயத்திற்கு நன்மை தரும். ஆனால் மீனை பொரித்து சாப்பிடாமல், வேகவைத்து அல்லது குழம்பாக சாப்பிடுவது சிறந்தது.
காய்கறிகளில் பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய், கோவைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், முட்டைகோஸ், பிராக்கோலி போன்றவற்றை சேர்க்கலாம்.
Also Read : இந்த 5 பழக்கங்களை உடனே கைவிடுங்க.. இல்லைன்னா இதய நோய் சீக்கிரம் வந்துடும்..!
நெல்லிக்காய், அறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, கரிசாலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, பாலக் கீரை போன்ற நார்ச்சத்து மற்றும் சத்துகள் நிறைந்த கீரை வகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பிளம்ஸ், பீச், பேரிக்காய், பன்னீர் திராட்சை, பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
நட்ஸ் வகைகளில் வால்நட், பாதாம், முளைகட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை, பாசிப்பயறு, பச்சைப்பட்டாணி, கொள்ளு போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, அதிக உப்பு மற்றும் எண்ணெய் பயன்பாட்டை குறைத்து, அளவோடு பயன்படுத்தினால் இதய நலம் காக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
