UPI யூஸ் பண்ணுறீங்களா? உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!

UPI நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பெட்டிக்கடை முதல் நகைக்கடை வரை இந்த UPI பரிவர்த்தனையை பயன்படுத்திவருகிறோம்.இந்த நிலையில் UPI-யில் அவ்வப்போதும் ஏதோனும் அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவருவதுண்டு.அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, UPI மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தியர்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் பண வரித்தனைகளில் UPI இன்றியமையாததாக மாறிவிட்டது. இந்நிலையில், UPI பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை, NPCI எனப்படும் இந்திய தேசிய கட்டண கழகம் மாற்றி அமைத்துள்ளது.

அதாவது, இன்று முதல் தனிநபர்கள், வணிகம் சார்ந்து மேற்கொள்ளும் UPI பரிவர்த்தனைகளுக்கு முன்னதாக இருந்த உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு செய்தல் இது போன்றவற்றைக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு 6 லட்சம் ரூபாயாகவும், கடன் மற்றும் மாதத் தவணைகளை செலுத்துவதற்கான வரம்பு 10 லட்சம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, UPI மூலம் நகைகளை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணிநேரத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மாதிரியான, வங்கியில் இருப்பு வைப்பதற்கு UPI மூலம் ஒரு நாளில் 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம். மேலும், தனிநபர்களுக்குள் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ஒரு லட்சமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News