Thursday, June 12, 2025

Google Pay, PhonePe, Paytm யூஸ் பண்றீங்களா? ₹2000-க்கு மேல் transactions செய்தால் GST விதிக்கப்படுமா?

UPI எனப்படும் Unified Payments Interface ஏதேனும் அதிரடி மாற்றங்களை வந்துகொண்டே இருக்கிறது… UPI பரிவர்த்தனை நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது..டீ கடை முதல் டிபார்மெட்ண்ட் ஸ்டோர்ஸ் வரை UPI பரிவர்த்தனை தான்.. தற்போது சமூக வலைத்தளங்களில் ₹2000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு அரசு GST விதிக்க திட்டமிட்டுள்ளதாக சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. தனிப்பட்ட பயனர்கள் மற்றும் சிறு வணிகர்கள் உட்பட பல UPI பயனர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது பெரும் விவாதம் ஏற்பட்ட பிறகு, CBIC,சமூக ஊடக தளமான X-ல் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு GST விதிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.

அதாவது அரசு இது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானவை, தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் அரசாங்கத்திற்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை.

சில சாதனங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் கொடுப்பனவுகள் தொடர்பான வணிகர் தள்ளுபடி விகிதம் அதாவது MDR போன்ற கட்டணங்களுக்கு மட்டுமே GST விதிக்கப்படுகிறது.
ஜனவரி 2020 முதல், CBDT, 2019 டிசம்பர் 30 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு மூலம், P2M அதாவது Person to Merchant, UPI பரிவர்த்தனைகளில் MDR-ஐ நீக்கியுள்ளது. தற்போது UPI பரிவர்த்தனைகளில் MDR வசூலிக்கப்படாததால், இந்த பரிவர்த்தனைகளுக்கு GST பொருந்தாது.

ஆகையால்,தனிப்பட்ட பயனர்கள் மற்றும் சிறு வணிகர்கள் எவ்வித பயமும் தேவையில்லை…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news