இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி கிரெடிட் கார்டு பில் செலுத்தும் தேதியை சிறிது தாமதமாக விட்டாலும், உடனே தாமதக் கட்டணம் விதிக்கப்படாது.
புதிய விதிமுறையின்படி, பில்லின் கடைசி தேதிக்கு பிறகு மூன்று நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். அதாவது, அந்த மூன்று நாட்களுக்குள் நீங்கள் தொகையைச் செலுத்தினால், எந்தவித தாமதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இதனால், வாடிக்கையாளர்கள் தேவையில்லாத கட்டணச் சுமையிலிருந்து விடுபடலாம்.
முன்பு, பில் தொகையை கடைசி தேதிக்கு முன்னே செலுத்தாமல் விட்டால் உடனே தாமதக் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. மேலும், தாமதக் கட்டணம் ஒரு நிலையான தொகை அல்ல. உங்கள் நிலுவைத் தொகையைப் பொறுத்து அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
இனி வங்கிகள் தாமதக் கட்டணம் வசூலிப்பதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தர வேண்டும். கட்டணங்களில் எதாவது மாற்றம் செய்தாலும், அதை ஒரு மாதம் முன்பே அறிவிக்க வேண்டும் என்று RBI தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
