Saturday, April 26, 2025

வெயிலில் இருந்து தப்பிக்க AC யூஸ் பண்றீங்களா..? அப்புறம் Cancer கூட வரலாம்..?

கோடை வெயிலின் வெளுத்து வாங்குவதால் பல இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், பலரும் குளிர்சாதன அதாவது ஏ.சி வசதியுள்ள அறைக்குள் அதிக நேரம் செலவிட தொடங்கி விட்டார்கள். அலுவலகம் மட்டுமின்றி வீடுகளிலும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.இப்படி ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பதன் பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். அவை பற்றிகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

அதிக நேரம் AC காற்றில் இருக்கும் நபர்கள் கண் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கண் வறட்சி போன்ற பிரச்சனைகளுடன் கண் பார்வை பாதிப்பு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் AC அறையில் இருப்பதால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் , ஆஸ்துமா, புற்றுநோய் என நோய்கள் ஏற்படுத்தும்.

AC காற்று காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக அதிக நேரம் AC-ல் இருந்து பின்னர் வெயிலில் சென்றால் ஒற்றை தலைவலி உண்டாகும் என்று கூறுகின்றனர்.

AC அறையில் அதிக நேரம் இருப்பது உடலின் தட்பவெட்ப நிலை பாதிப்புக்கு இதனால் உடலின் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

AC காற்று கண்களையும், சருமத்தையும் பாதிக்கிறது.
அதிக நேரம் AC காற்றில் இருப்பவர்களிடையே சரும வறட்சி, எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளும் காணப்படுகிறது.. நீண்ட நேரம் AC யில் இருப்பவர்களிடையே சுவாச பிரச்சனை உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இயல்பான ஒன்றாக இருக்கிறது. மேலும் தொண்டை வறட்சி, நாசி அழற்சி, நாசி அடைப்பு போன்ற பிரச்சனைகளும் வருவதற்கான வாய்ப்பிற்கு வழிவகுக்கிறது.. இவையெல்லாம் பொதுவான தகவலின் அடிப்படையான கருத்துக்களே ஆகும்

Latest news