பூப்பெய்திய பெண்கள் பாவாடை, தாவணி உடுத்துவது ஏன் தெரியுமா…?

295
Advertisement

வயதுக்கு வந்துவிட்டாள், பூப்பெய்திவிட்டாள், பருவமடைந்துவிட்டாள்,
ஏஜ் அட்டென் பண்ணிவிட்டாள், பெரிய மனுஷியாகிட்டாள்,
உட்கார்ந்துவிட்டாள் எனப் பலவிதங்களில் சொல்லப்படும்
தருணம், தான் சிறுமியன்று பருவப் பெண் என்பதையும், வெட்கம் எனில்
என்னவென்பதையும் உணரும் தருணம்….

இந்த உடல் சார்ந்த நிகழ்வைப் பெரிய விழாவாக குடும்பத்தோடு
சொந்தபந்தம், அக்கம்பக்கம் எல்லாம் கொண்டாடி மகிழ்ந்த காலம்
மலையேறிக்கொண்டிருக்கிறது.

இன்றும் கிராமப்புறங்களில் சிறுமிகள் வயதுக்கு வருவது ஆரவாரத்தோடு
கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றுமுதல் தாவணி அணியும்
வழக்கத்துக்கு உள்ளாகிறாள் அப்பெண்.

இந்த தாவணி ஆண்கள் அனைவரையும் ஈர்க்கும்விதமாக அமைந்திருந்தாலும்,
சுடிதார், லெக்கின்ஸ், ஜீன்ஸ் பேன்ட்போல் ஆபாச உடையாக, கவர்ச்சியான
உடையாக இருப்பதில்லை என்பது பெருமைக்குரிய விஷயம்.

அதேசமயம் தாவணி உடுத்துவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன.

பருவடைந்த நாளிலிருந்து கர்ப்பப்பை உள்ள இடத்திலும், தொப்புளைச் சுற்றியும்
காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாவாடை, தாவணி, சேலை
கட்டும் வழக்கத்தை முன்னோர்கள் பின்பற்றத் தொடங்கினர். அப்போதுதான்
அதிக உஷ்ணம் ஏற்படாமல் கர்ப்பப்பை இருக்கும்.

ஜீன்ஸ் பேன்ட், சுடிதார், லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிவதால்,
கர்ப்பப்பை உஷ்ணம் அடைந்து உஷ்ணம் வெளியேற முடியாமல்,
கர்ப்பப்பையைக் காக்க நீர்க்கட்டியைக் கர்ப்பப்பைக்குள் ஏற்படுத்தி
உஷ்ணத்தைக் குறைக்க முயற்சிசெய்கிறது.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். பாவாடை தாவணி ஆபாசமான
உடையல்ல. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கண்ணியமான உடை. கிண்டல்
கேலி செய்யாமல் தாவணி உடுத்திய பெண்களை நம் சகோதரியாகக்
கருதுவோம். கிண்டல் கேலிக்குக் கூச்சப்பட்டே பெண்கள் நவநாகரிகமான
ஆரோக்கியமற்ற உடைக்கு மாறுகின்றனர்.