உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் தங்களின் மத்திய வங்கிகள் மூலம் குறிப்பிட்ட அளவு தங்கத்தை சேமித்து வைத்திருக்கின்றன.
உலகில் அதிக தங்கத்தைக் கையிருப்பில் வைத்திருக்கும் நாடு அமெரிக்காவாகும். அங்கு சுமார் 8133 டன் தங்கம் வைப்பில் உள்ளது. இது அந்நாட்டின் நிதி நிலைத்தன்மைக்கு உதவுகிறது.
Also Read : கம்மி விலையில் தங்கம் கிடைக்கும் 6 நாடுகள் இதுதான்
இரண்டாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. சுமார் 3350 டன் தங்கம் வைப்பில் உள்ளது. 2ஆம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி தங்கத்தை அதிகமாக சேமித்து வருகிறது.
மூன்றாவதாக, இத்தாலி 2452 டன் தங்கத்துடன் அதிக ஸ்டாக் வைத்திருக்கும் நாடாகும். 2ஆம் உலகப்போருக்குப் பிறகு நிதி பாதுகாப்பு கருத்தில்கொண்டு இத்தாலி தங்கம் ஸ்டாக் வைத்துள்ளது.
பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் சுமார் 2437 டன் தங்கம் இருப்பில் உள்ளது.
சீனாவில் அதிகாரப்பூர்வமான தரவுகளின்படி 2299 டன் தங்கம் வைப்பில் உள்ளது, ஆனால் உண்மையான அளவு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், மத்திய அரசு சுமார் 880 டன் தங்கத்தை ஸ்டாக் வைத்துள்ளது. மேலும், தங்கம் இருப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
