உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படும். ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு’ மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தையும் (80.5 புள்ளிகள்), சீனா 2-வது இடத்தையும் (73.7 புள்ளிகள்) பெற்று இருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் குறியீட்டின்படி, இந்த 2 நாடுகளும் மிக சக்திவாய்ந்த நாடுகளாக சொல்லப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் (40 புள்ளிகள்) உள்ளது. இந்த புள்ளி விவரங்களை வைத்து இந்தியா முக்கிய சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்துக்கு நாட்டின் பொருளாதார மீட்பு, ராணுவபலம், அரசியல் முக்கியத்துவம் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளது.
இந்தியாவை தொடர்ந்து 38 புள்ளிகளுடன் ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷியா 32.1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.
