சமீபத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் ”காதி”. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கிய இப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அனுஷ்காவுக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்திருந்தார். அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
மீண்டும் அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்து ரசிகர்களை மிரளவைத்திருந்தாலும், கதை களத்தில் ஏற்பட்ட தொய்வு தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ‘காட்டி’ படத்தின் முதல் பாகம் உணர்வு பூர்வமாக இருந்ததால், அனுஷ்காவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார். அதே போல் இந்த படத்தின் இரண்டாம் பாதி அதிரடி நிறைந்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படம் வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்துள்ளது.ரிலீசாகி 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருந்தநிலையில், படம் எதிர்பார்த்தபடி ஓடாததால், ஓடிடிக்கு முன்கூட்டியே கொண்டு வர முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.