139 மற்றும் 182 உதவி எண்கள் பற்றி தெரியுமா? ரயில்வே பயணிகளுக்கான அட்டகாசமான சேவை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் 139 மற்றும் 182 எனும் உதவி எண்கள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட முக்கிய தொலைபேசி எண்களாகும்.

139 என்ற எண், ‘ரயில்வே விசாரணை சேவை’ அதாவது Railway Enquiry Service க்காக செயல்படுகிறது. இதன் மூலம் பயணிகள் ரயில் நேரம், டிக்கெட் முன்பதிவு நிலை, கால தாமதம், ரயில் எண், தளம் விவரம், வண்டி அமைப்பு போன்ற அனைத்து பொதுவான தகவல்களையும் அறியலாம். மேலும் 139 எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. பயணிகள் தொலைபேசியில் அழைப்பதோடு மட்டுமல்லாமல், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் வழியாகவும் சேவைகளைப் பெறலாம்.

182 என்ற எண், ‘ரயில்வே பாதுகாப்பு உதவி எண்’ அதாவது Railway Security Helpline-ஆக இருக்கிறது. இது முக்கியமாக பயணிகள் பாதுகாப்பு மற்றும் அவசர சூழ்நிலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. பயணத்தின் போது பொருள் திருட்டு, பெண்களுக்கு தொந்தரவு, உடல்நல அவசரம், விபத்து அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக 182-க்கு அழைத்தால் அருகிலுள்ள ரயில்வே பாதுகாப்பு படை விரைந்து உதவி அளிக்கும்.

இந்த இரண்டு எண்களும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக செயல்படும் தேசிய அளவிலான ரயில்வே உதவி எண்களாகும். பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்திற்காக இந்திய ரயில்வே, பயணிகள் இந்த எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், 139 தகவல் சேவைக்கும், 182 பாதுகாப்பு உதவிகளுக்கான சேவையாகவும் இருக்கிறது.

Related News

Latest News