பல வீடுகளில் முட்டைகளை வாங்கி வந்ததும் ஃப்ரிட்ஜின் கதவுப் பக்கத்தில் உள்ள தனி இடத்தில் வைத்துவிடுவோம்.ஆனால் இது தவிர்க்கவேண்டிய பழக்கம். காரணம், ஃபிரிட்ஜின் கதவை அடிக்கடி திறக்க மூடுவதால் வெப்பநிலை மாறி, பாக்டீரியா வளர்ச்சி அதிகரித்து முட்டைகள் வேகமாக கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
முட்டையை வாங்கியவுடன் அதனை கழுவி வைப்பதும் கூட சரியான வழி அல்ல. முட்டையின் ஓடுகள் மிக மென்மையாக உள்ளதால், கழுவும்போது அது விரிசடைந்து, பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றிற்கு வழி வகுக்கும். ஆகவே, முட்டையை கழுவாமல், ஈரப்பதம் இல்லாத பாத்திரத்தில் வைத்து வைக்க வேண்டும்.
Also Read : முட்டை நல்லதுதான்…ஆனால் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல..!!
உங்கள் முட்டைகளை பாதுகாப்பாக வைக்க ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடியில் டிஸ்யூ பேப்பர் அல்லது நியூஸ்பேப்பர் வைத்து, அதன் மேல் முட்டைகளை வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். இதனால் முட்டை நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும்.
முட்டையை டப்பாவில் வைக்கும்போது அதன் அகலமான பகுதி கீழ்ப்புறத்திலும் கூரான பகுதி மேல்புறத்திலும் இருக்கும்படி வைக்க வேண்டும். முட்டையை எல்லோரும் ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்ய மாட்டார்கள் ரூம் டெம்பரேச்சரிலும் ஸ்டோர் செய்வார்கள். அதுதான் சிறந்த முறை.
