சிறுநீரக சேதத்தின் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். கீழ்க்கண்ட அடையாளங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- கீழ் முதுகு வலி
இந்த வலி பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒருபக்கமாக மட்டும் கீழ் முதுகில் கூர்மையான வலி, குமட்டல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் அது சிறுநீரக சேதத்தை குறிக்கலாம்.
- நெஞ்சு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
இதயம் மட்டுமல்ல, சிறுநீரகக் குறைபாடுகளும் இதுபோன்ற வலிகளையும் சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். இது சிறுநீரக நோய் முற்றிலும் தீவிரமான நிலையில் காணப்படலாம்.
- அடிவயிற்று வலி மற்றும் குமட்டல்
அடிவயிற்றில் வலி அல்லது குமட்டல் இருந்தாலும், பலர் அதனை சாதாரணமாக எடுப்பார்கள். ஆனால் அது சிறுநீரகத் தொற்றுடனும் தொடர்பு இருக்கலாம். ஆகவே, காரணமின்றி அடிவயிற்றுப் பகுதியில் வலி இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
- தலை வலி மற்றும் தலைச்சுற்றல்
சிறுநீரகம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியாவிட்டால், அதிக இரத்த அழுத்தத்தால் தலை வலி, தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது.
- கால் மற்றும் பாதங்களில் வீக்கம், வலி
கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் இருந்தால், அது சிறுநீரக சேதத்தின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு. சிறுநீரகம் நச்சுக்களை வெளியேற்ற முடியாவிட்டால், நச்சுக்கள் உடலில் தேங்கி வீக்கம் ஏற்படும்.
சிறுநீரக குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து பராமரிக்க இது போன்ற அறிகுறிகளை கவனித்துக்கொள்ளுங்கள். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
