நமது இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் பாயும் அழுத்தத்தையே இரத்த அழுத்தம் என்று அழைக்கிறோம். இரத்தம் இயல்பை விட அதிக வேகத்தில் பாய்ந்தால், அது உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தீவிரமான உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
அதனால், இரத்த அழுத்தத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தத்திற்கு வெளிப்படையான அறிகுறிகள் இல்லாததால், அதன் அமைதியான அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உடலில் தோன்றும் சில மாற்றங்கள், இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை உணர்த்தும்.
உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகள் சில உடலில் தோன்றினால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தினால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.
காலையில் எழுந்தவுடன் அதிக சோர்வாக உணர்வது, இரவில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் விறைப்பு அல்லது இறுக்கம் அடிக்கடி ஏற்பட்டால், அது இரத்த நாளங்களில் உயர் அழுத்தம் நிலவுவதைக் குறிக்கலாம்.
காரணமின்றி பதட்டம் அல்லது கவலை அதிகமாக உணரப்பட்டால், நரம்பு மண்டலம் அதிகமாக செயல்படுவதன் விளைவாக இரத்த அழுத்தம் உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது.
கண்களுக்கு முன் அழுத்தம் அல்லது கண்கள் கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுவும் உயர் இரத்த அழுத்தத்தின் ஒரு அமைதியான அறிகுறியாக இருக்கலாம்.
காலையில் தலையின் பின்புற பகுதியில் வலி ஏற்படுவது, இரவு முழுவதும் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததைக் காட்டும் முக்கிய அறிகுறியாகும்.
எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் அதிகமாக வியர்த்தால், அதுவும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இவ்வாறான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
