உங்ககிட்ட PAN CARD இருக்கா? இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

கடன் மோசடிகள் மற்றும் அடையாளத் திருட்டுகள் அதிகமாகி வரும் இந்த காலத்தில், உங்கள் PAN கார்டு மூலம் யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். PAN கார்டு உங்கள் கடன் வரலாற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதால், உங்கள் பெயரில் எடுத்த அனைத்து கடன்களும் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. உங்கள் PAN கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை நீங்கள் எளிதாக கண்டறியலாம்.

கடன் மோசடியை கண்டுபிடித்தால் செய்யவேண்டியவை

  • கடன் வழங்குனரிடம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும்
  • கிரெடிட் பியூரோவில் புகார் பதிவு செய்யவும்
  • அடையாள ஆவணங்கள், கடன் விவரங்கள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உறுதிமொழி சமர்ப்பிக்க வேண்டும்
  • அருகிலுள்ள சைபர் கிரைமே போலீஸ் நிலையத்தில் புகார்விடவும்

மோசடிகளை தடுக்கும் வழிகள்

  • PAN கார்டு எண்ணை பாதுகாப்பற்ற இணையதளங்கள், அப்ளிகேஷன்கள், மற்றும் மெசேஜிங்கில் பகிர வேண்டாம்
  • பொதுவில் PAN எண்ணை வெளியிடாதீர்கள்
  • PAN கார்டு தொலைந்தால் உடனடியாக மீண்டும் பிரிண்ட் செய்துகொள்ளுங்கள்
  • நேரம் செலவிட்டு கிரெடிட் ரிப்போர்ட்டை பார்க்கவும்
  • வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி உங்கள் நிதி கணக்குகளை பாதுகாப்பாக வைக்கவும்
  • PAN தொடர்புடைய கடன்கள் மற்றும் கிரெடிட் கார்ட்களுக்கு SMS மற்றும் Email அலர்ட்களை இயக்கு

இத்தகைய மோசடிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் பொருளாதார நிலையை பாதிக்கலாம். எனவே PAN கார்டை உங்கள் வங்கி PIN மற்றும் ஆதார் எண்ணைப் போல எச்சரிக்கையாக கையாளுங்கள். உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி கண்காணித்து, எந்த ஒரு சந்தேகமும் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும்.

Related News

Latest News