இந்தியாவில் பான் கார்டு என்பது அடையாள அட்டை மட்டுமல்லாமல், அனைத்து முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளுக்கும் அவசியமான ஒரு ஆவணமாகும். இதை ஆதாருடன் இணைக்காவிட்டால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் 2026 ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு தானாகவே செயலிழந்துவிடும்.
பான் கார்டை ஆதாருடன் இணைக்க வருமானவரி இணையதளத்தில் ‘Link Aadhaar’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்து, பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு 1,000 ரூபாய் கட்டணத்தை செலுத்தி இணைக்கலாம்.
இலவச இணைப்பு காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதனால் காலை நிமிடங்களில் வீட்டிலிருந்தே இந்த இணைப்பை முடித்துக்கொள்ளவும்.
கட்டணம் செலுத்தி சரிபார்ப்பு முடிந்தவுடன், உங்கள் பான் மற்றும் ஆதார் கார்கள் வெற்றிகரமாக இணைக்கப்படும். இணைப்பின் நிலையை ‘Link Aadhaar Status’ என்ற விருப்பத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
