ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, குறைந்த பட்ஜெட்டில் அதிக நன்மைகள் வழங்கும் வகையில் பிஎஸ்என்எல் திட்டங்கள் அமைந்துள்ளன.
அந்த வகையில், ஜியோ மற்றும் ஏர்டெலை விட குறைந்த விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்குகிறது. அவற்றின் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதன் மூலம் பயனர்களுக்கு மொத்தமாக 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதோடு, தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டியும் 365 நாட்கள் ஆகும். எனவே, இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் வசதிகள் வழங்கப்படுகின்றன. தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) நன்மைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். இதன் மூலம் மொத்தமாக 300ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் வசதிகளும், தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.
