Monday, December 1, 2025

ஜில்லுன்னு மழை பெய்யும்போது காஃபி, டீ குடிச்சிட்டே இருக்கீங்களா?

சடசடன்னு மழை பெய்யும்போது, ஒரு சூடான டீ அல்லது காஃபி கப் பிடித்துக்கொண்டு ஜன்னல் அருகே அமர்வது பலருக்கும் பிடித்த பழக்கம். ஆனால், மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, மழைக்காலங்களில் அதிகமாக டீ, காஃபி அருந்துவது உடல்நலத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

டீ மற்றும் காஃபி இரண்டிலும் கஃபீன் (Caffeine) என்ற பொருள் உள்ளது. இது தற்காலிக உற்சாகத்தையும் வெப்பத்தையும் தரினும், அதிகமாக அருந்தினால் உடலில் நீர்சத்து இழப்பு Dehydration ஏற்படும்.

மழைக்காலங்களில் வியர்வை குறைவாக இருந்தாலும், உடலின் நீர் சமநிலை சீராக வைக்கப்படுவது மிக அவசியம். அதனால், ஒரு நாளில் 2 கப்-ஐ தாண்டாமல் டீ அல்லது காஃபி அருந்துவது சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கஃபீன் அதிகம் உள்ள பானங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தவும், இதய துடிப்பை அதிகரிக்கவும் காரணமாகலாம். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மழை காலங்களில் நம் உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நேரம் என்பதால், வெறும் வயிற்றில் காஃபி அல்லது டீ குடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, இஞ்சி, மஞ்சள், துளசி போன்ற இயற்கை பொருட்கள் சேர்த்த Herbal Tea அருந்துவது நல்லது.

சூடான பானங்கள் மழையில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள உதவினாலும், அதற்கும் ஒரு வரம்பு அவசியம். ஒருசில நேரங்களில் காஃபி, டீ அருந்துவது மனஅமைதிக்கும், உடல் சூட்டுக்கு உதவும்; ஆனால் அதிகம் குடித்தால் உடல்நலத்தைக் கெடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News