Monday, February 3, 2025

மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு பலிக்காது – ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை கடைப்பிடித்து நடந்திருந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்க மாட்டார்கள் என்று கூறினார். “யார் அந்த சார்” விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Latest news