Sunday, May 11, 2025

தமிழக மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம் – அண்ணாமலை குற்றச்சாட்டு

வரும் 5-ந்தேதி தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுக்கான கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பாஜக கூட்டத்தில் பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. தொகுதி மறுவரையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்பட மாட்டாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லியுள்ளார்.

தெளிவான விளக்கத்திற்கு பிறகும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏற்புடையதல்ல. தொகுதி மறுசீரமைப்பு குறித்து புரளி பரப்புகின்றனர். தமிழக மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம் என அவர் பேசியுள்ளார்.

Latest news