செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
“இந்த ஊழல் தி.மு.க. ஆட்சியை விரட்டி அடிப்போம், வீட்டுக்கு அனுப்புவோம் என்று இங்கே அனைவரும் வந்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சி முடிவுக்கு இன்று தொடக்கம். தி.மு.க. அரசு என்றாலே ஊழல் அரசு, கொடுங்கோல் ஆட்சி, பூஜ்ஜியம் ஆட்சி.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்வளத் திட்டம் பூஜ்ஜியம், மருத்துவ கல்லூரி பூஜ்ஜியம், புதிய மின் திட்டம் பூஜியம். இப்படி எல்லாவற்றிலும் பூஜ்ஜியம்.
தகுதி, திறமை, நேர்மை இல்லாதது தி.மு.க. ஆனால், ஊழலில் மட்டும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தி.மு.க. உள்ளது.
வாயை திறந்தாலே பொய். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள். இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க.வை அகற்றுங்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.
