இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என் ரவி வந்தார். அப்போது தேசிய கீதத்தை முதலில் பாட வில்லை என்று குற்றம்சாட்டி சட்டசபையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்தும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.