ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அரசு பல்கலைகழகங்களில் முதலமைச்சர் வேந்தராகும் தீர்மானத்தை திமுக எதிர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் குற்றம்சுமத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வன், நீட் தேர்வு விலக்கு குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவது திமுகவின் நாடகம் என விமர்சித்தார்.
நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என சிறுபிள்ளைத்தனமாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர் உதயநிதி என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அரசு பல்கலைகழகங்களில் முதலமைச்சர் வேந்தராகும் தீர்மானத்தை அன்று எதிர்த்த திமுக, இன்று வேடிக்கையான அரசியலை செய்து வருவதாகவும் வைகைச் செல்வன் குற்றம்சுமத்தியுள்ளார்.