Friday, December 27, 2024

புதுப் பொலிவுடன் திமுக அதிகாரப்பூர்வ இணையதளம் DMK.in! கருணாநிதி 100! துவக்கி வைத்த ஸ்டாலின்!!!

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான DMK.in என்ற முகவரியில் புது பொலிவுடன் புதிய பரிணாமத்துடன் மெருகூட்டப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

DMK.in என்ற திமுக இணையதளத்தில் அண்மை நிகழ்வுகள், திராவிட மாடல், சாதனைகள், கொள்கைகள், வரலாறு, மக்கள் பிரதிநிதிகள் என பல பிரிவுகள் உள்ளன. மேலும் திமுக வெளியீடுகள், தேர்தல் அறிக்கைகள், கருணாநிதி வரலாறு என பல பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் அரசு சார்ந்த அறிவிப்புகள், புகைப்படங்கள், அறிக்கைகளும் திமுக இனையதளப் பக்கத்தில் இடம்பெறும் வகையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உழைப்பு, உழைப்பு, உழைப்பு, அதுவே நம் தளபதி என்ற வாசகமும் இந்த இணையதளப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன

Latest news