தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், உடன் சென்ற அவரது தோழியும் உயிரிழந்தனர்.
சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36). சீலையம்பட்டி கீழப்புலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இவரும் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த தோழி வைத்தீஸ்வரி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இது பலத்த காயமடைந்த தோழி வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திமுக பிரமுகர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுனர் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
