Saturday, April 19, 2025

ஓசியில் பெட்ரோல் கேட்டு திமுக பிரமுகர் அடாவடி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, விழமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன்(48). திமுக பிரமுகரான இவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கேட்டுள்ளார். அதற்கு பெண் ஊழியர் புஷ்பா ஏற்கனவே பெட்ரோல் போட்டுச் சென்ற நூறு ரூபாய் பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் சீனு, பெண் ஊழியர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி சட்டையை கிழித்து கன்னத்தில் ஓங்கி அறைந்து தாக்கியுள்ளார் இதில் காயமடைந்த புஷ்பா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

திமுக பிரமுகர் புஷ்பாவை தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனுவாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest news