சென்னை பம்மலை சேர்ந்தவர் பீட்டர் கஸ்பர். இவர் திருநிர்மலையில் எம்.சாண்ட் மணல் குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் பம்மல் 5வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீதர் ஆகியோர் அந்த பகுதியில் குவாரி நடத்த வேண்டும் என்றால் மாதம் 3 லட்சம் மாமூல் தரவேண்டும் என குவாரி உரிமையாளர்களிடம் மிரட்டி கடந்த 2019ம் ஆண்டு முதல் பணம் பெற்றுவந்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது குவாரி சரியாக ஓடாததால் சில மாதங்களாக மாமூல் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், குவாரியில் இருந்து லாரியை எடுத்துச் சென்ற லாரி ஓட்டுநரை, திமுக வட்டச்செயலாளர் அனிஷ்டன் அவரது சகோதரர் ஸ்ரீதர் ஆகியோர் சரமாரியாக தாக்கியதா தெரிகிறது.
இதனை தடுக்க வந்த குவாரி உரிமையாளர்களை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக சங்கர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், திமுக வட்டசெயலாளர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சோழிங்கநல்லூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.