சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் தனது நண்பரான தியாகுவுடன் பயணம் செய்துள்ளார். இந்த விமானத்தில் சென்னை அனகாபுத்தூரில் வசித்து வந்த 25 வயதான பணிப்பெண் வேலை செய்து வருகிறார்.
பிரபாகரனும் தியாகுவும் மது போதையில் விமான பணிப் பெண்ணை அழைத்து தொந்தரவு செய்துள்ளனர். பின்னர் தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் பணிப் பெண்ணின் உடலில் கை வைத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் இது தொடர்பாக பிரபாகரன் மற்றும் தியாகு இருவர் மீதும் மீனம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான தியாகு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தி.மு.க. பிரமுகர் கைதாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
