Tuesday, February 4, 2025

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் சேலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவாசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உறுவாக்கவும், அரசு பள்ளிகளை தனியாருக்கு வழங்க முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட தேமுதிக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து நிலவு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Latest news