Thursday, July 31, 2025

சீமானுக்கு அடி மேல் அடி…கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியதிலிருந்து அவரது கட்சியை சேர்ந்தவர்களே அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைள் பிடிக்காமல் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கட்சியின் முக்கிய நபராக பார்க்கப்பட காளியம்மாள் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும், தமிழ்தேசியத்துக்கு எதிராக பெரியாரை முன் நிறுத்துவது தமிழர் நிலத்துக்கே பேராபத்தாக முடியும் எனவும் கூறி கட்சியில் இருந்து பாவேந்தன் விலகியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியிலும், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் தொகுதியிலும் நா.த.க சார்பில் பாவேந்தன் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News