அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் மீதான அதிருப்தி காரணமாக விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிவி சண்முகம் மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து அக்கட்சியின் விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய பசுபதி, சிவி சண்முகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார்.
சிவி சண்முகம் தனது பினாமிகளுக்கும், தனது சமூகத்தினருக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். தாம் தோல்வி அடைந்த விழுப்புரம் தொகுதியில் வேறு யாரும் வெற்றி பெற்றுவிட கூடாது என்பதில் சிவி சண்முகம் குறிப்பாக இருப்பதாகவும், உழைக்கும் நிர்வாகிகளுக்கு சிவி சண்முகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவின் பவர் சென்டரான சிவி சண்முகத்திற்கு எதிராக நிர்வாகிகள் வெடித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
