விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியத்தில் நடந்த ஆலோசனை கூட்டட்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். உழைப்பாளிகளை நசுக்குகின்ற அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது என்றும் திமுக ஆட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது எனவும் விமர்சித்தார்.
அவர் பேசி கொண்டிருந்த போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர், திமுக ஆட்சியில் எதுவும் நிரந்தரம் இல்லை, மின்சாரமும் நிரந்தரம் இல்லை, வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிட்டது என சாடினார். ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது, நல்லவராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.