கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. இதனால் அவருக்கு ‘சிறுத்தை சிவா’ என பெயர் வந்தது.
இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என நான்கு திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவருடன் சிறுத்தை சிவா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
