’சித்திரம் பேசுதடி’, ’அஞ்சாதே’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ’பிசாசு’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். படங்களை இயக்குவது மட்டுமில்லமால் படங்களில் நடித்தும் வருகிறார்.
இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த மிஷ்கின், தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகனான துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாக உருவாகவிருக்கும் ஐ அம் கேம் (‘I’m Game’) திரைப்படத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளார்.
இந்த படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது.