திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவுக்கு, வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் நேரடி விமானம் இயக்கப்படவுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்பட பல நாடுகளுக்கும், மாவட்டங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவிற்கு நேரடி விமானம் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல், நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.