Monday, March 31, 2025

“இதெல்லாம் ஒரு பொழப்பா?” – கூட்டணி குறித்த கேள்விக்கு கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக, பாமக, பாஜக எல்லாம் ஒன்றுதான். நாங்கள் எல்லாம் கூட்டணிங்க என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் பாமக, பாஜக கூட்டணிக்கு வருவதாக நான் யாரிடமும் சொல்லவில்லை. எவன்கிட்ட அப்படி சொன்னேன்? எவனாவது எடுத்திருக்கானா? அப்படி நான் சொல்லி இருந்தால் எடுத்திருப்பீங்கதானே.. சும்மா இப்படி எல்லாம் செய்தால்.. இதெல்லாம் ஒரு பொழப்பா? என பேசினார்.

கூட்டணி விவகாரம் எல்லாம் நான் பேசக் கூடிய விஷயமே அல்ல.. பொதுச்செயலாளர்தான் பேசனும்.. அதனால் நான் காலையில் அப்படி எல்லாம் கூட்டணி பற்றி சொல்லவே இல்லை எனவும் கூறியுள்ளார்.

Latest news