கிராமப்புறம் முதல் நகரம் வரை, ஸ்மார்ட்போன் உபயோகத்தின் காரணமாக மக்கள் யூபிஐ-யை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறை மக்கள் மத்தியில் விரைவில் பரவியிருக்கிறது.
தற்போது வந்துள்ள மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் யூபிஐ பரிவர்த்தனைகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தொடரும். இதுகுறித்து புதிய திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மலோத்ரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தி, அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக வைத்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.