அதிகாலையில் எழுந்திருப்பதால் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் கிடைத்தாலும் பலரால் நடைமுறையில் இந்த பழக்கத்தை பின்பற்ற முடியவில்லை.
காலையில் எழும்ப மிகவும் சிரமமாக இருப்பதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சோர்வு.
வெளிச்சம், இருட்டின் அடிப்படையில் இயங்கும் Circadian Rythm அடிப்படையில் உடல் இயங்கும். இதனாலேயே உடல் ஆரோக்கியம் நிர்ணயிக்கப் படுவதால், இரவு நேரத்தில் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
காலை எழும்ப திட்டமிடும் நேரத்திற்கு குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக படுக்கைக்கு சென்று விட வேண்டும். படுக்கைக்கு சென்ற பின்னர் மொபைல் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, தூக்கம் வரும் வரை புத்தகம் படிப்பதை பழக்கமாக்கி கொள்ளலாம்.
தூங்குவதற்கு முன் அன்றைய நாளின் நிகழ்வுகளை டைரியில் எழுதுவது மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும். காலையில் எழுந்தவுடன் குளிப்பது, உடற்பயிற்சி, காலை உணவு எடுத்துக் கொள்வது என முறையாக திட்டமிட்டால் நேரத்தை வீணாக்காமல் உற்சாகமாக நாளை தொடங்க முடிவதோடு, நேர்மறையான எண்ணங்களும் அதிகரிக்கும்.
மேலும் கடினமாக தோன்றினாலும் 21 நாட்கள் வரை எந்த ஒரு நடைமுறையை பின்பற்றினாலும் அது பழக்கமாகிவிடும் என்பதற்கேற்ப, தொடர்ந்து முயற்சி செய்தால் யாராலும் காலையில் திட்டமிட்ட படி எழுந்து செயல்பட முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.