ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி வெளியான திரைப்படம் டீசல். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்க வினய், சாய் குமார், அனன்யா, ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே ரூ.5 கோடிக்கும் குறைவாகவே இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘டீசல்’ OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம், வரும் நவம்பர் 21-ம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது. அதேநாளில் பைசன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
