பிரணவ் மோகன்லால் நடித்த சமீபத்திய மலையாள சூப்பர் ஹிட் ஹாரர் திரைப்படமான ‘டைஸ் ஐரே’ டிசம்பர் 5 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, ‘பூதகளம்’ மற்றும் ‘பிரமயுகம்’ போன்ற திகில் படங்களின் இயக்குநரான ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப், அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை கிறிஸ்டோ சேவியர் அமைத்துள்ளார்.
