டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சமூகவலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.