Thursday, May 22, 2025

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாரா இர்ஃபான்? திடுக்கிடும் தகவல்! காலை வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே!

உள்நாடு வெளிநாடு என ஒரு இடத்தையும் விட்டுவைக்காமல் அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் உணவை ருசித்து வீடியோக்களை பதிவிட்டு வருபவர் தான் யூடியூபர் இர்ஃபான். இவர் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது என்பதை வாழ்க்கைமுறையாக்கி கொண்டார் போலிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் Dictionary-யில் சர்ச்சை என்ற வார்த்தைக்கு வேறு சொல் “இர்ஃபான்” ஏறு கூட ஆகிவிடலாம்.

இப்படித்தான் ஒரு முறை தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தற்குறித்தனமாக வெளிப்படுத்தியதோடு போதாக்குறைக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடியை அவரே கட் செய்து ஏகப்பட்ட வசைபாடலுக்கு ஆளானார்.

“அட இது என்ன பிரமாதம்” என்று சொல்லும்படி இன்னொரு விஷயம் நடந்தது. அது தான் ஈத் பெருநாளில் தெரு ஓரங்களில் உள்ள மக்களுக்கு பணம் மற்றும் உடை கொடுக்கிறேன் பேர்வழி என்று காரில் இருந்து கூட இறங்காமல் பொருட்களை கொடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை மோசமாக பேசியது இணையத்தில் வைரலாகி இர்ஃபான் “சல்லிசல்லியாக” நொறுக்கப்பட்டார். அதற்கு பிறகு அவரின் Youtube சேனலுக்கு Views தரைதட்டி அதிர்ச்சியில் ஆடிப்போன நிலையில் “எல்லாரும் என்ன உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சிடுங்க” என்னும் தோரணையில் மன்னிப்பு வீடியோ ஒன்றும் போட்டார்.

இப்படி உள்நாட்டில் சம்பவம் செய்து போர் அடித்துவிட்டது போலிருக்கிறது அவருக்கு. ஏனென்றால் இப்போது சிக்கியிருப்பது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த சர்ச்சையில். அதாவது சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில யூடியூபர்களும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து அதில் யூடியூபர் இர்ஃபான் தலையும் எக்கச்சக்கமாக சிக்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான சில முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக சில யூடியூபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இர்ஃபான் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மற்ற சில YouTuber-களும் வெளிநாடுகளில் சென்று வீடியோக்களை எடுத்து தங்கள் YouTube-பில் பதிவிட்டிருப்பதால் இவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பு “பிரகாசமாக” இருப்பதாக கூறப்படுகிறது.

Latest news