Tuesday, February 17, 2026

‘இட்லி கடை’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான திரைப்படம் இட்லி கடை. இது இவரது இயக்கத்தில் வெளியான 4வது படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News