வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிராக் பல்கலைக்கழகத்தில், நகரும் படிக்கட்டு திடீரென வேகமாக செயல்பட்டதால், மாணவர்கள் அச்சமடைந்தனர். நகரும் படிக்கட்டு வேகமாக சென்றதை கண்டு அச்சமடைந்த மாணவர்கள், விரைவாக அதிலிருந்து இறங்கி விலகி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து BRAC பல்கலைக்கழகம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது பராமரிப்புப் பிரச்சனை சம்பந்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
