Devara 2 படத்தின் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்!!

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த தேவரா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமானார்.

தேவரா திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. மேலும், உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்த நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Related News

Latest News