சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது.
டெங்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் விரைவாக குணம் அடைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், கழிவு பொருட்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே அதுபோன்ற பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக பராமரிக்கும் படி சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.
