டெல்லி கார் வெடிப்பு – வெளிச்சத்துக்கு வந்த ஷாக்கிங் தகவல்! அடுத்தடுத்து சிக்கும் டாக்டர்கள்!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் வெடிபொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வெடித்த கார் தெற்கு புல்வாமாவைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது எனவும், அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இது சாதாரண விபத்தா அல்லது தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை, பயங்கரவாத செயல்கள் மற்றும் தொடர்புடைய தண்டனைகள் அடங்கிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட பிரிவுகள் 16, 18, கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் 12 மணி நேரங்கள் கடந்தும், சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறை இணைந்து நடத்திய சோதனையில் 2,900 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வீடுகளை டாக்டர் முஜம்மில் ஷகீல் வாடகைக்கு எடுத்திருந்ததாகவும், அவரும் டாக்டர் அடில் ராதரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு செங்கோட்டையில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததாகவும், கார் உரிமையாளர் டாக்டர் உமர் முகமது பீதியடைந்து இதை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related News

Latest News