டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து அதன்பின் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 10 உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பயணிகள் பெயரில் ஊடுருவல் ஏதும் நடக்கின்றதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
